Monday, April 23, 2012

முல்லைத்தீவில் துப்பாக்கி ரவைகளுடன் ஒருவர் கைது!

Monday, April 23, 2012
இலங்கை::முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணி பகுதியில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகளை தன்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் இரண்டாயிரத்து 250 ரவைகள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தின் தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட குழுவினர் சந்தேகநபரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

சந்தேகநபர் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment