Monday, April, 23, 2012புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை தொடங்குகிறது. விலைவாசி உயர்வு, பணவீக்கம், கருப்பு பணம் போன்ற பிரச்னைகளை கிளப்ப பா.ஜ. திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 12ம் தேதி தொடங்கியது. 14ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 16ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 30ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம் நடந்தது. ஏப்ரல் 23ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. முதல் கட்டத்தின் கடைசி 7 நாட்கள் இரு அவைகளும் தெலங்கானா பிரச்னை காரணமாக முடக்கப்பட்டது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் கட்டம் நாளை தொடங்குகிறது. இந்த தொடரின்போது நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. ஒரு சில திருத்தங்களுடன் லோக்பால் மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலைவாசி உயர்வு, பணவீக்கம், கருப்பு பணம் போன்ற பிரச்னைகளை எழுப்ப பா.ஜ. திட்டமிட்டுள்ளது. லோக்பால் மசோதா, தேசிய தீவிரவாத தடுப்பு மையம் போன்ற பிரச்னைகளை கையில் எடுக்க இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment