Sunday, April, 22, 2012இலங்கை::விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட எமது பிள்ளைகள் எங்கிருக்கின்றனர் என்று இன்றுவரை தெரியவில்லை என்று வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் முகாமிற்கு சென்ற இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் அங்குள்ள மக்கள் மன்றாட்டமாக கோரிக்கை விடுத்திருந்ததுடன் பாவப்பட்ட தங்கள் மீது இரக்கம் கொண்டு காணாமல் போன எமது பிள் ளைகளை மீட்டுத் தாருங்கள் என்றும் அந்த அகதி மக்கள் இந்திய எம். பி. க்கள் குழுவிடம் கோரியுள்ளனர். இந்த மக்களின் இக்கோரிக்கையை குழுவினர் சோக உணர்வுடன் கேட்டுக் கொண்டாலும் எவ்விதமான பதிலையோ, உறுதிமொழியையோ வழங்காது நமது அடுத்த கட் டத்திற்கு நகர்ந்து சென்றனர்.
முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமைகள், அந்த மக்களுக்கான வசதிகள் மற்றும் மீள் குடியேற்ற நிலைமைகள் என்பன குறித்து இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு விரிவாக ஆராய்ந்தது. குறிப்பாக மீள்குடியேற்ற தாமதத்துக்கான காரணங்கள் குறித்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் இந்திய எம். பி. க்கள் குழுவுக்கு விளக்கமளித்தார். இவ்வாறு கலந்துரையா டிய பின்னர் இந்திய எம். பி. க்கள் குழுவினர் முகாம்களுக்கு சென்று மக்களின் கூடாரங்களில் சந்தித்துப் பேசினர். இந்திய குழுவுக்கு தலைமை தாங்கும் இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் பல கூடாரங்களுக்குள்ளும் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டதுடன் அகதி மக்களுடன் தானே நேரடியாகவும் கலந்துரையாடினார். வந்திருந்த ஒவ்வொரு பாராளு மன்ற உறுப்பினர்களும் தனித்தனியாகக் கூடாரங்களுக்கு சென்று மக்களுடன் உரையாடியதுடன் அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்தனர்.
இந்திய எம். பி.க்களிடம் அகதி முகாமிலுள்ள பொது மக்கள் தகவல் வெளியிடுகையில், தங்க ளுக்கான நிவாரணங்கள் குறைந்து விட்டன என்றும் உக்கிப்போன அரிசியே கிடைக்கின்றது. பருப்பு என்று கூறி எதனையோ தருகின்றனர். அவற்றை உண்ண முடியாமல் உள்ளது. இவ்வாறு பல கஷ்டங்களுக்கு மத்தியிலேயே இங்கு வாழ்கின்றோம் எனத் தெரிவித்தனர். ஆனால் இவ ற்றை அரசாங்க அதிபரும், அதிகாரிகளும் முற்றாக மறுதரித்தனர். தம்மைச் சந்திக்க வரும் வெளி நாட்டுப் பிரதிநிதிகளிடம் இவ்வாறு இவர்கள் தெரிவிப்பது வழமையானதொன்றாகிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அகதி முகாம் வாழ்வு ஒருபுறமிருக்க அரசியல் தீர்வு விடயம் தொடர் பாக இந்திய பாராளுமன்றக் குழுவைச் சந்தித்துரையாடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசி யல் தீர்வு உட்பட தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளின் தற்போதைய நிலை மற்றும் வடக்கின் உண்மை நிலைவரம் போன்ற விடயங்களை மிகவும் ஆழமாக இந்திய சர்வகட்சி பாராளுமன்ற குழுவிற்கு தெளிவுபடுத்தியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளது. இருதரப்பும் மனம் விட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து பரந்தளவில் பேசியுள்ளோம்.
இந்திய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க ஒத்துழைப்புகளையும் தேவையான உதவிகளையும் செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்விஜயமானது அரசியல் தீர்வு பேச்சுவார்த்தைக்கும் தீர்வுத் திட்டத்துக்கும் ஓர் அழுத்தமாக அமையும். மூன்றாம் தர ப்பின் தேவை பேச்சுவார்த்தைகளின் முன்னெடுப்பிலேயே தீர்மானிக்கப்படும். அரசாங்கத்துட னான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணப்படாவிட்டால் மூன்றாம் தரப்பு அவசியமானதா கும் என்ற விடயத்தையும் கூட்டமைப்பு நாசூக்காகச் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசுடனான பேச்சுக்கள் குறித்து நாம் இந்திய நாடாளுமன்றக் குழுவினருக்கு தெளிவுபடுத்தி னோம். அத்துடன், இதுவரையில் நடைபெற்று வந்த பேச்சுக்கள் குறித்தும் விளக்கமளித்தோம்.
அரசு சரியான முறையானதொரு பேச்சுக்கு வரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு, அவ் வாறு பேச்சுக்கு வந்து அதில் இணக்கம் ஏற்பட்டால் தெரிவுக்குழு குறித்து பரிசீலிக்கலாம் என்ற தமது நிலைப்பாட்டையும் தெரிவித்ததாகவும், நீண்டகாலமாகச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக் கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகள் தொடர்பிலும் இந்தியக் குழுவிற்கு தாம் விளக்கமளித்ததாகவும் தமிழ்க் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது.
தாம் இலங்கை வந்து நேரடியாக அவதானித்த விடயங்களிலிருந்தும், அரசியல் கட்சிகளுடன் நடத்திய பேச்சுக்களிலிருந்தும் இந்திய பாராளுமன்றக் குழு பல விடயங்களைத் தெளிவாகப் புரிந்திருக்கும் இவர்கள் தமது நாடு திரும்பியதும் குறிப்பாகத் தமிழக அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் இங்குள்ள உண்மை நிலையை விளக்க வேண்டும். அவர்கள் நினைப்பது போன்று, தமிழர்கள், இங்கு வாழ முடியாத நிலையில் இல்லை. தமது பிரதேசத்தில் அம்மக்கள் சுதந்திர மாக வாழ்கிறார்கள் என்பதை எடுத்துக் கூற வேண்டும்.
மூன்று தசாப்த கால யுத்தத்தின் பின்னர் ஈட்டப்பட்டுள்ள சமாதானத்தை நிரந்தரமாக வைத்துக் கொள்ள இலங்கையில் அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்று மிக அவசியமானது என்ற கருத்து இல ங்கை வந்திருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினரால் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் மாநில ஆட்சி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதே போன்று இலங்கையில் மாகாணசபைகளின் ஊடாக அதிகாரத்தைப் பகிரமுடியும். அத்துடன் தற்போது இலங்கை அர சாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் திருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என குறி ப்பிட்டுள்ளனர். நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். தமிழ் மக்களுக்கு உரிய தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படாவிட்டால் போர் முடிவுறுத்தப்பட்ட போதிலும் பிரச்சினைகள் உருவாகும். உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படுவது மிகவும் பொருத்தமானது.
இந்திய பாராளுமன்ற குழுவினரின் இலங்கை விஜயம் காலத்துக்குத் தேவையான ஒரு நிக ழ்வு என அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்திருக்கிறார். போரினால் பாதிக்கப் பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை நேரடி யாகச் சென்று உண்மையான நிலைமையைப் பார்க்க அவர்களுக்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் அரசாங்கம் அந்தப் பகுதிக ளில் பவ்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. பலஸ்தீனத்தில் 4 மில்லிய னுக்கு அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ள போதும் அவர்களின் மீள்குடியேற்றம் இன்னும் முடியவில்லை. ஆனால், இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களில் 95 வீதமானர்கள் ஏற்கனவே மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் யாப்பா தெரிவித்திருந்தார்.
வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை முனனேற்றுவற்கு இலங்கை அரசாங்கம் எடுத்தி ருக்கும் நடவடிக்கைகள் குறித்து இந்தியப் பாராளுமன்றத்தில் விளங்கப்படுத்தி, இது தொடர்பில் சிறந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்த இந்திய பாராளுமன்றக் குழுவினர் முக்கியமானவர்கள் தமிழ் சமூகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் வசதிகளை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் இலங்கை தொடர்பான நல்லபிப்பிராயத்தை இந்தியா அதிகரிக்க முடியும்.
No comments:
Post a Comment