Sunday, April, 22, 2012இலங்கை::கொழும்பு நகரில் இடம்பெறும் குற்றச்செயல்களை குறைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த வகையில் பொரளை ரி-20 பிரதேச மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று முற்பகல் நடத்திய சோதனையில் சிலர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேஸ் லைன் வீதியை மறித்து பொதுமக்களால் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆரப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment