Sunday, April 22, 2012இலங்கை::கடத்தல்களில் ஈடுபடுவோர் யார் என்ற விபரங்களை அமைச்சர் ரவூப் ஹக்கீம் அறிவார் அமெரிக்கா தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்கத் தூதரகத்தினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கடத்தல் சம்பவங்களுக்கும் மிகவும் உயர் மட்டத்தினருக்கும் தொடர்பு இருக்கின்றது என ஹக்கீம் தெரிவித்துள்ளார் என விக்கிலீக்ஸ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கடத்தல்களுடன் யாருக்கு தொடர்பு இருக்கின்றது என்பதனை நேரடியாக ஹக்கீம் குறிப்பிடவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹக்கீம் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
2007ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் திகதி அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக்கிற்கும், அப்போதைய தொலைதொடர்பு அமைச்சர் ஹக்கீமிற்கும் நடைபெற்ற சந்திப்பின் அடிப்படையில் இந்த தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடத்தல் தொடர்பான அழுத்தங்கள் முடிவடையும் வரையில் சில முஸ்லிம் வர்த்தகர்கள் வெளிநாடுகளில் வாழ்வதற்கு தீர்மானித்துள்ளதாக ஹக்கீம், பிளக்கிடம் குறிப்பிட்டுள்ளார். (கொலம்போ ரெலிகிராப்)
No comments:
Post a Comment