Sunday, April 22, 2012நியூயார்க்::அமெரிக்கா பாஸ்டன் பல்கலைகழகத்தில் மேலாண்மை பட்டப்படிப்பு படித்து வந்த, இந்திய மாணவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.அமெரிக்கா, பாஸ்டன் பல்கலைகழக வளாகம் அருகே காமன்வெல்த் அவென்யூ பகுதியில், 19ம் தேதி அதிகாலை வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், தீயணைப்பு படையினர் விரைந்துசென்று அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அவரது தலையிலும், கால் பகுதியிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ரத்த காயங்கள் இருந்தன.
அடுத்த சில நிமிடங்களில் அந்த வாலிபர் இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், பாஸ்டன் நகர போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர், 24வயது கொண்ட இந்தியர் என்பதும், அவர் பாஸ்டன் பல்கலைகழகத்தின் மேலாண்மை பட்டக் கல்வி பள்ளியில் படித்து வந்தார் என்பது மட்டும் தெரிந்தது.அவரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார் என்பதும், அவரது தலையிலும், கால் பகுதியிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருப்பதும் விசாரணையில் தெரிந்தது.அவர் இந்தியாவில் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது உட்பட தகவல்களை தெரிவிக்க, போலீசார் மறுத்து விட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கடந்த 19ம் தேதி, அதிகாலை 3 மணிக்கு எங்களுக்கு தொலைபேசி தகவல் வந்தது. நாங்கள் விரைந்துவந்து விசாரணை நடத்தியபோது, அந்த வாலிபர் இறந்து விட்டது தெரிந்தது. இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.பல்கலைகழக விடுதியில் மற்றும் வெளியே தங்கி, கல்வி பயின்று வரும் மாணவர்கள் பயப்படத் தேவையில்லை. அனைவருக்கும் பல்கலைகழக போலீசாரும், பாஸ்டன் நகர போலீசாரும் முழு பாதுகாப்பு வழங்கியுள்ளோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment