Sunday, April 22, 2012இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என அரசியல் மட்டங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் நோர்வேயின் அமைச்சரவை மாற்றத்தின்போது, பதவியிழந்த எரிக் சொல்ஹெய்ம் தீவிர அரசியலில் இருந்து விலகி, இராஜதந்திரப் பணியில் இணைந்து கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. ஆதன் அடிப்படையில் முக்கியத்துவம் மிக்க ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்கான போட்டியில் களம் இறங்கியுள்ளதாக தெரிய வருகிறது.
ஐ.நாவுக்கான நோர்வேயின் தூதுவராக நியுயோர்க்கில் பணியாற்றும் மோர்டென் வெற்லன்ட் 4 ஆண்டு பதவிக்காலத்தை முடித்து ஒஸ்லோ திரும்பவுள்ளார்.
எனினும் இந்த ஐ.நா தூதுவர் பதவிக்கு எரிக் சொல்ஹெய்முடன் மேலும் மூவரது பெயர்கள் பட்டியலில் உள்ளதாகவும் எவ்வாறெனினும் இந்தப் பதவிக்கு எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏரிக் சொல்ஹெய்ம் ஏற்கனவே ராஜதந்திர மட்டத்திலும் சர்வதேச நாடுகள் சிலவற்றின் சமாதான முயற்சிகளிலும் நோர்வெயின் விசெட தூதராக பணியாற்றியவர். இறுதியாக தனது அமைச்சர் பதவியை பொறுப்பெற்க முன் இலங்கையின் சமாதான முயற்சியில் 3ஆம் தர ஏற்பாட்டாளராக விளங்கியவர். இறுதி யுத்தத்தின் போதும் புலிகளுடனும் அரசாங்கத்துடனும் நேரடி தொடர்பில் இருந்தவர். அந்த வகையில் நோர்வே இல்ங்கையின் போர் குற்றங்கள் பற்றிய சர்வதேச அங்கீகரிக்கப்பட்ட விசாரனை அவசியம் என வலியுறுத்தி வருகிறது.
இதனால் நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான இலங்கையின் தூதுவர் நிலையில் இருக்கும் போர்க்குற்றம் சாட்டப்படும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எரிக் சொல்ஹெய்ம்; தலைவலி கொடுக்கலாம் என இலங்கை கவலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆண்மையில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்தபோது, எரிக் சொல்ஹெய்ம் இலங்கை மீதான அழுத்தம் குறித்து வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment