Sunday, April 22, 2012

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் முதலாவது ராஜதந்திர பேச்சுவார்த்தை!

Sunday, April 22, 2012
இலங்கை::இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் முதல் தடவையாக ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகளும், இஸ்ரேலின் ஆசிய பசுபிக் பிராந்திய வலயத்திற்கான பிரதிப் பணிப்பாளர் ருத்கயனோப் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

விவசாயம், சுற்றுலாத்துறை, வர்த்தகம், தொழில்வாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க இஸ்ரேல் இணக்கம் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment