Thursday, April 26, 2012

ஜனாதிபதியின் தென்கொரிய விஜயம் இலங்கைக்கு நன்மை - ஜீ.எல்.பீரிஸ்!

Thursday, April, 26, 2012
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தென்கொரிய விஜயம், இலங்கைக்கு பல்வேறு நன்மைகளை பெற்றுத்தருவதாக அமைந்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிடுகின்றார்.

தென்கொரிய விஜயம் தொடர்பில் தெளிவூட்டும் சந்தர்ப்பத்திலேயே வெளிவிவகார அமைச்சர் இந்தக் கருத்தினைக் கூறினார்.

கொரியாவின் பாரிய நிறுவனங்களிடம் இலங்கையின் தற்போதைய நிலை குறித்து எடுத்துக்கூறப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் அவர்கள் திருப்தி வெளியிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அந்தநாட்டு தொழிலதிபர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு எண்ணியுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் 23,000 இலங்கையர்கள் கொரியாவில் பணிபுரிவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த எண்ணிக்கையை வருடாந்தம் அதிகரிப்பதற்கு கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் இலங்கையில் கொரிய மொழியை கற்பிப்பதற்கான ஒத்துழைப்பை அந்தநாட்டு அரசாங்கம் வழங்கவுள்ளதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment