Thursday, April 26, 2012

தபாலில் ஹஷிஸ் போதைப்பொருள் அனுப்பியமை தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது!

Thursday, April, 26, 2012
இலங்கை::தபாலில் ஹஷிஸ் போதைப்பொருள் அனுப்பிய சம்பவம் தொடர்பில் இரண்டாவது சந்தேக நபர் இன்று வியாழக்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவையைச் சேர்ந்த 25 வயதான வில்ரொன்; றேகன் என்ற நபரே கைதுசெய்யப்பட்டதாகவும் இவர் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல முற்பட்ட வேளையில் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

திரைப்பட நடிகை ஏஞ்சலா செனவிரட்னவின் பெயருக்கு அனுப்ப்பட்ட போதைப்பொருள் அடங்கியிருந்ததாக கூறப்படும் தபால் பொதியை பெறுவதற்கு மத்திய தபால் பரிவர்தனை நிலையத்திற்குச் சென்ற இருவரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். மற்றையவர் தப்பியோடி மறைந்திருந்தார்.

பொலிஸ் போதைப்பொருள் நிர்வாகம், ஏஞ்சலா செனவிரட்ன வழக்கு விவகாரத்தில் சம்பந்தப்படவில்லையெனக் கூறி அவரை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துள்ளது.

No comments:

Post a Comment