Thursday, April, 26, 2012இலங்கை::தீர்க்கதரிசனத்துடன் செயற்பட்டதால், இலங்கையில் புலிகளை தோற்கடிக்க முடிந்ததாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தென்கொரியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், அங்கு தொழில் செய்கின்ற இலங்கையர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணர்வகளிடம் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
தென்கொரியா தீர்க்கதரிசனத்துடன் செயற்பட்டதன் காரணமாவே சிறந்த அபிவிருத்தி நாடாக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தென்கொரியாவில் தொழில் புரிகின்ற இலங்கையர்கள் தொடர்பில், அந்த நாட்டின் ஜனாதிபதி சிறந்த மனோபாவத்தை கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment