Thursday, April 26, 2012

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார் - யாழ் மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார்!

Thursday, April, 26, 2012
இலங்கை::மக்களை மீளக்குடியமர்த்தியதுடன் மீளக்குடியமர்ந்த மக்களது நலன்களிலும் வாழ்வாதார மேம்பாடுகள் தொடர்பிலும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார் என யாழ் மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

வசந்தபுரம் இளவாலையில் நேற்று (25) இட்மபெற்ற அடிப்படைக் கட்டுமானங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்ற கொடிய யுத்தம் காரணமாக இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து பல்வேறு அவல வாழ்வு வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இப்பகுதியை படைத்தரப்பினரிடமிருந்து விடுவிப்பது மற்றும் மக்களை மீளக்குடியேற்றுவது போன்ற நடவடிக்கைகளில் அமைச்சர் அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தியது மட்டுமல்லாது துறைசார்ந்தவர்களிடனும் கலந்துரையாடியிருந்தார்.

அதன் பயனாகவே இன்று இப்பகுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மீளக்குடியமர்ந்த மக்களது நலன்கள் தொடர்பான விடயங்களிலும், வாழ்வாதார மேம்பாடு அபிவிருத்தி தொடர்பிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மிகுந்த அக்கறையடன் செயற்பட்டு வருகின்றார் எனவும் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்திற்கு இன்னும் 60 ஆயிரத்து 500 வீடுகள் தேவையாகவுள்ள நிலையில் 27 ஆயிரம் வீடுகள் உலக வங்கி பொருளாதார அபிவிருத்தி அமைச்சு யு.என்.டி.பி உள்ளிட்ட நிறுவனங்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் எமது மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தி வரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

அங்கு நோர்வே தூதரக முதன்மைச் செயலாளர் கருத்துத் தெரவிக்கும் போது 90 மில்லியன் ரூபா செலவில் வசந்தபுரம் உள்ளிட்ட யாழ் மாவட்டத்தின் சில பகுதிகளில் வீட்டுத் திட்டங்களை நோர்வே அரசு அமைத்துள்ளது.

இப்பகுதியினது தற்போதைய அபிவிருத்தி கண்டு நாம் மிகழ்ச்சி கொள்ளும் அதேவேளை இம்மக்களது வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும் உதவி வருகின்றோம் எனவும் இறுதி யுத்தத்திற்கு பின்னரான இக்காலப் பகுதியில் வடக்கு கிழக்கு பகுதிகளில் நோர்வே அரசு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கருத்துத் தெரவிக்கும் போது மீளக்குடியேறியுள்ள மக்களில் பலருக்கு காணி உரிமங்கள் இல்லாதுள்ளதாகவும் விரைவில் அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

நோர்வே அரசின் நிதியுதவியுடன் யு.என்.டி.பி. நிறுவனத்தால் கட்டப்பட்ட பொதுநோக்கு மண்டபம் முன்பள்ளி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் அரைக்கும் ஆலை மற்றும் வீடுகளுக்கான உரிமைச் சான்றிதழ்களை நோர்வே தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் மார்ட்டி ரோக்கினோஸ் வழங்கி வைத்தார்.

தொடர்ந்து ஒவ்வொரு கட்டிடத் தொகுதிகளையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உள்ளிட்ட அதிதிகள் திறந்து வைத்துப் பார்வையிட்டனர்.

அத்துடன் வசந்தபுரம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தை திறந்து வைத்த அதிதிகள் வியாபார நடவடிக்கைகளையும் சம்பிரதாயப்பூர்வமாகத் தொடக்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் யு.என்.டி.பி.யின் இலங்கைக்கான பிரதி திட்டப் பணிப்பாளர் ரசீனா மில்கமி சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரும் தெல்லிப்பளை பதில் பிரதேச செயலாளருமான முரளீதரன் ஈ.பி.டி.பி.யின் வலிவடக்கு பிரதேச இணைப்பாளரும் வலி வடக்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான அன்பு உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி கட்டிடத் தொகுதிகள் 55 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment