
இலங்கை::ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மே தினக் கூட்ட நிகழ்வுகளில் புலிகள் தாக்குதல் நடத்தக் கூடிய அபாயம் காணப்படுவதாக, அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகர்களது பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் ஊடாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய பிரபுக்கள் மீது புலி உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, இவ்வாறான வதந்திகளின் மூலம் யாழ்ப்பாண மே தினக் கூட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
புலிகள் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் முக்கிய பிரபுக்களுக்கு யாழ்ப்பாணத்தில் எவ்வாறு புலிகளினால் அச்சுறுத்தல் ஏற்படும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பில் அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவு உத்தியோகபூர்வமாக எச்சரிக்கை எதனையும் விடுக்கவில்லை என அர் சுட்டிக்காட்டியுள்ளார். சில முக்கிய பிரபுக்களின் பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் ஊடாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை மே தினக் கூட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த உத்தேசித்துள்ளது.
No comments:
Post a Comment