Friday, April 20, 2012

தமிழக மீனவர்கள் சார்பான பிணை மனு ஒத்திவைப்பு!

Friday, April, 20, 2012
இலங்கை::இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் ஐவர் சார்பில் யாழ். மேல் நீதிமன்றில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஐந்து மீனவர்கள் இலங்கை மீனவர்கள் மூவர் தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை பிணையில் விடுவிக்குமாறு கோரி யாழ. மேல் நீதிமன்றில் இன்று பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை பரிசீலித்த யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் அதனை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். குறித்த மீனவர்கள் கடந்த நவம்பர் 23 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment