Monday, April 23, 2012

இலங்கை வந்த இந்திய நாடாளுமன்ற குழுவினரின் தேசப்பற்றும் பொறுப்புணர்வும் நம் நாட்டிலுள்ள எதிர்க் கட்சியினர்க்கு நல்லதொரு முன்னுதாரணம் - பசில் ராஜபக்ஷ!

Monday, April 23, 2012
இலங்கை::இலங்கை வந்த இந்திய நாடாளுமன்ற குழுவினரின் தேசப்பற்றும் பொறுப்புணர்வும் நம் நாட்டிலுள்ள ஐ.தே.க., ஜே.வி.பி, த.தே.கூ. போன்ற எதிர்க் கட்சியினர்க்கு நல்லதொரு முன்னுதாரணம் என தெரிவித்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ, புத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து சில நாடுகள் சுய நல நோக்கங்களுக்காக பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தினகரனுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி ஒன்றிலேயே அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்;

அரசாங்கம் யுத்தத்தினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு நல்வாழ்வு அளிக்கும் புனர்வாழ்வு, புனர்நிர்மாணம், மீள்குடியேற்ற நடவடிக்கைகளை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு தயக்கம் காட்டுகின்றது என்று ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றன.

அரசாங்கம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டின் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திப் பணிகளை சீரான முறையில் மேற்கொண்டு வருகின்றது. பொருளாதாரத்துறையில் நாட்டில் உள்ள மாவட்டங்களில் முதலிடத்தை கொழும்பு மாவட்டமும் இரண்டாவது இடத்தை கம்பஹா மாவட்டமும், மூன்றாவது இடத்தை வவுனியா மாவட்டமும் பெற்றிருக்கின்றது.

இதில் இருந்து இரண்டு ஆண்டு என்ற மிகக் குறுகிய காலத்தில் வடபகுதியின் பிரதான மாவட்டமான வவுனியாவை அரசாங்கம் எந்தளவுக்கு பொருளாதார ரீதியிலும் மற்றெல்லா வகையிலும் முன்னேற்றம் அடையச் செய்திருக்கின்றது என்பதை எவரும் தெட்டத்தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

யுத்தத்தினால் இடம் பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த வசிப்பிடங்களில் மீள்குடியேற்றுவதற்காக கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளும் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தை இன்று சென்று பார்ப்பவர்கள் அங்கு இடம் பெற்றுள்ள அபிவிருத்திப் பணிகள் மற்றும் நவீன மயப்படுத்தல் செயற்பாடுகளைப் பார்த்தால் இந்த இடத்திலா யுத்தம் நடைபெற்றது என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு அந்நகரம் மாற்றம் கண்டுள்ளது.

முல்லைத்தீவு சந்தையின் நவீனமயப்படுத் தல் பணிகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாத போதிலும் அங்கு சென்ற நான் அந்தச் சந்தையைப் பார்த்து பேராச்சரியம் அடைந்தேன். வன்னிப் பிரதேச மக்களின் வாழ்க்கை நிலை இன்று உயர்ந்திருக்கின்றது.

அங்குள்ள எந்த வீட்டுக்குச் சென்றாலும் எல்லா அறைகளிலும் அறுவடை செய்யப்பட்ட நெல்மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை நான் அவதானித் தேன். நெல் மட்டுமல்ல உழுந்து மூடை களும் இவ்விதம் ஒவ்வொரு வீட்டிலும் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் வடபகுதி மக்களின் பொருளாதாரம் மீண்டும் களைகட்ட ஆரம் பித்திருப்பதை நான் அவதானித்தேன்.

வன்னிப் பிரதேச மக்களின் விவசாயத் துறையின் மேம்பாட்டுக்காக இன்று அப்பிரதேசத்தில் உள்ள வாவிகள், நீர்த் தேக்கங்கள், குளங்கள் அனைத்தும் புனரமைப்பு செய்யப்பட்டிருக்கின்றன. அத்துடன் அங்குள்ள விவசாய குடிமக்களின் மேம்பாட்டுக்காக இலகு கடன் அடிப் படையில் இரண்டு சக்கர, நான்கு சக்கர உழவு இயந்திரங்களும், நீர்ப்பாய்ச்சும் இயந்திரங்களும், விதை நெல்லும் உரப் பசளையும் தங்கு தடையின்றி தாராளமாகக் கொடுக்கப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் கொரிய அரசாங்கத்தின் உதவியுடன் நவீன தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றது. கொழும்பிலோ ஏனைய நகரங்களிலோ இருக்கும் தொழில்நுட்பக் கல்லூரிகளைவிட யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரி அதிகூடுதலான வசதிகளைப் பெற்றி ருப்பதைப் பார்த்து நான் பெருமிதம் அடைகிறேன்.

வடபகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு கணனி வகுப்புக்களை நடத்துவதற்குத் தேவையான அளவு கணனி இயந்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைவிட வடபகுதி மாணவர்களின் இசைக் கல்வியறிவை பெருக்கும் நோக்கத்துடன் அங்குள்ள பாடசாலைகளுக்கு பியானோ போன்ற இசைக்கருவிகளும் வழங்கப்பட் டிருக்கின்றன.

வடபகுதியில் விவசாயத்துறை மட்டுமன்றி கால்நடை அபிவிருத்தியும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. நெஸ்லே நிறுவனத்துக்குத் தேவையான 20 சதவீத மான தூய்மையான பால் வன்னிப் பிரதேசத்தில் இருந்து பெறப்படுகின்றது. ‘திவிநெகும’ என்ற மக்களின் வாழ் வாதாரத்தை பெருக்கும் திட்டம் யாழ்ப் பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் வெற்றிகரமான முறையில் நடைமுறைப்படுத் தப்பட்டிருக்கின்றது.

வடபகுதியில் திரும்பிய இடம் எல்லாம் வங்கிக் கிளைகள் திறக்கப்படு கின்றன. இது வடபகுதி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு சான்று பகரும் ஒரு சாதனமாக விளங்குகின்றது. இவற்றுடன் வடபகுதியில் நன்நீர் மீன் பிடி முயற்சிகளும் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. இங்குள்ள நீர்த்தேக்கங்கள் வாவிகளுக்கு ஆயிரக்கணக்கில் மீன்குஞ்சுகள் அவற்றின் இனப் பெருக்கத்துக்காக விடப்படுகின்றன. நன்நீர் மீன்பிடித் தொழிலாளர்களுக்குத் தேவையான வலைகள், படகுகள், படகுகளுக்கான மோட்டார்கள் போன்றவையும் இலகு கடன் அடிப்படையில் அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படுகின்றன.

யுத்தத்தினால் இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களின் மீள்குடியேற்றம் அவர்களுக்கான வாழ்வாதாரம் போன்ற வசதிகளை இலங்கை அரசாங்கம் சீரான முறையில் செய்து முடித்திருக்கின்றதா என்பதை நேரில் வந்து கண்டறிவதற்காக வந்திருக்கும் இந்திய பாராளுமன்ற குழுவினருக்கு இலங்கை அரசாங்கமும் பொதுமக்களும் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்கியிருப்பது நம் நாட்டு மக்களின் நற்பண்புகளை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது.

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ் நாட்டுக்குச் செல்லும் நம் நாட்டு அரசியல் வாதிகள் +விசியலுடன் தொடர்புடைய பிரமுகர்கள் ஏன் பல்வேறு சந்தர்ப்பங்களில் சாதாரண மக்கள் கூட இந்தியாவில் அடித்துத் துன்புறுத்தப்பட்ட பல சம்பவங்கள் சமீபத்தில் இடம் பெற்றிருந்த போதிலும் நம் நாட்டவர்கள் அவ்விதம் குரோத உணர்வுடன் இங்கு வரும் இந்தியர்களை மனிதாபிமானம் அற்ற முறையில் நடத்தவில்லை. இதுவும் இலங்கை மக்களின் பண்டைய கலை கலாசார சம்பிரதாயங்களை பறைசாற்றுவதாக அமைந்திருப்பது குறித்து நாம் உண்மை யிலேயே மகிழ்ச்சியடைய வேண்டும்.

இந்தியர்கள் தங்கள் நாட்டில் அரசியலில் பலதரப்பட்ட கொள்கைகளை கடைப்பிடித்து வந்தாலும் இந்தியாவின் பொதுப் பிரச்சினைகளைப் பொறுத்தமட்டில் அவர்கள் அந்தத் தனிப்பட்ட கருத்து மோதல்களை மறந்து இந்தியர்கள் என்றே சிந்திக்கின்றார்கள். அதனால் தான் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பாராளுமன்றத் தூதுக்குழுவுக்கு இந்திய அரசாங்கம் தங்கள் நாட்டின் எதிர்க் கட்சித் தலைவி திருமதி சுஸ்மா சுவராஜை தலைவியாக நியமித்திருந்தது.

இந்தியத் தூதுக்குழுவினர் ஏற்கனவே இலங்கையில் கலந்து கொள்ளும் நிகழ்வுகள் குறித்து ஒரு நிகழ்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டு அது இந்தியா வுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டும் இருந்தது. ஆயினும் இலங்கைக்கு வந்த முதல் நாள் அன்றே இந்தியத் தூதுக்குழுவின் தலைவி சுஸ்மா சுவராஜ் தங்களுக்கு மெனிக்பாம் முகாமுக்கும் செல்ல வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்து தாங்கள் மெனிக்பாமுக்கு போகாவிட்டால் உண்மை நிலையை அறிந்துகொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

இந்தக் கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்து, இந்தியத் தூதுக்குழுவினரை மெனிக்பாமுக்கு அழைத்துச் சென்றது. அங்கு உள்ளவர்களுடன் கலந்துரையாடுவதற்கு இலங்கை அதிகாரிகளும் இராணுவத்தினரும் எவ்வித தடங்கலும் செய்யாமல் அவர்கள் இந்தியக் குழுவினருக்கு தங்களது பூரண ஒத்துழைப்பையும் ஆதரவையும் நல்கினார்கள்.

அதையடுத்து மீள்குடியேற்றப்பட்ட இடங்களுக்கும் சென்று யுத்தத்தினால் இடம் பெயர்ந்த மக்களை சந்திக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்த கோரிக்கைக்கும் அரசாங்கம் உடனடியாக இணக்கம் தெரிவித்து, புளியங்குளம் போன்ற பிரதேசங்களில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களை சென்று பார்ப்பதற்கும் இந்திய பாராளுமன்ற தூதுக்குழுவினருக்கு வசதிகளை செய்து கொடுத்தது.

இவ்விதம் சகல இடங்களையும் தங்கள் விருப்பத்திற்கமைய சென்று பார்த்த இந்தியப் பாராளுமன்றத் தூதுக்குழுவின் அங்கத்தவரான தமிழ் நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சுதர்ஸன் நாச்சியப்பன், தங்களது இந்த விஜயம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிகரமாக அமைந்திருக்கிறது என்றும் இங்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் புனர்வாழ்வு மற்றும் வாழ்வாதார திட்டங்கள் குறித்து தாங்கள் மிகவும் திருப்தியடைந்து இருப்பதாக கூறினார்.

இலங்கை வாழ் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக வந்திருக்கும் இந்தியப் பாராளுமன்றத் தூதுக்குழுவில் தமிழ் மக்களின் நன்மையில் ஆர்வம் கொண்டவர்களைப் போன்று பொது மேடைகளில் பேசும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், கலைஞரின் திராவிட முன்னேற்றக் கழகமும் கலந்து கொள்ளாமை குறித்து பாரதிய ஜனதாக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இவ்விரு கட்சிகளும் இலங்கை சென்றுள்ள தூதுக்குழுவில் கலந்து கொள்ளாமை இந்தத் தூதுக்குழு கொடுக்கும் அறிக்கையை வலுவிழக்கச் செய்யும் என்றும் பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

இது தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களை தங்கள் அரசியல் இலாபத்துக்காக பகடைக் காய்களாக பயன்படுத்தும் ஒரு முயற்சியாகவே நான் பார்க்கிறேன்.

இலங்கைக்கு வந்திருக்கும் இந்தியப் பாராளுமன்றத் தூதுக்குழுவினர் சாதாரண அரசியல்வாதிகளாக நடந்து கொள்ளாமல், இந்தியாவின் இராஜதந்திரிகளைப் போன்று நாட்டுப்பற்றுடன் நடந்து கொண்டார்கள். அவர்கள் இந்தியாவுக்கு திரும்பிய பின்னர் இலங்கை நிலைப்பாடு குறித்து எத்தகைய கருத்தை வெளியிடுவார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இங்கு வந்திருக்கும் இந்தியப் பாராளுமன்றக் குழுவினர் தங்களின் உள்நாட்டு அரசியல் பேதங்களுக்கு அப்பாற்பட்ட முறையில் இந்தியர்களாக நாட்டுப் பற்றுடன் சிந்தித்து செயலாற்றியமை எங்கள் நாட்டில் உள்ள தேசப்பற்றற்ற நாட்டுக்குத் துரோகம் இழைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு ஒரு நல்ல முன் உதாரணமாக விளங்குகின்றது.

எங்கள் நாட்டின் அரசியல் கட்சிகளான ஜே.வி.பி. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்றவை இவ்விதம் இலங்கையர் என்ற நாட்டுப்பற்றுடன் செயற்படாமல் இருப்பது குறித்து நாம் வேதனைப்படுகின்றோம்.

அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும், அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற குறுகிய சுயநல நோக்கத்துடன் நம் நாட்டு எதிர்க் கட்சிகள் நடந்து கொள்வது உண்மையிலேயே கண்டனத்துக்குரிய செயலாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற தமிழ்க் கட்சிகள் இவ்விதம் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் தீங்கிழைக்கக் கூடிய வகையில் போலியான கருத்துக்களை ஜோடித்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை இந்திய பாராளுமன்றத் தூதுக்குழுவினருக்கு தெரிவித்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அரசாங்கம் செய்துவரும் நற்பணிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு எடுத்துவரும் முயற்சிகளை நாம் ஒரு தேசத் துரோகச் செயற்பாடாகவே கருத வேண்டி இருப்பதாகவும் அமைச்சர் வேதனையுடன் கூறினார்.

No comments:

Post a Comment