Monday, April 23, 2012

புலிகளின் முன்னாள் போராளிகளைத் தேடிப் பிடிக்கும் பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்று கிழக்கு மாகாணத்தில் - கொழும்பு ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது!

Monday, April 23, 2012
இலங்கை::புலிகளின் முன்னாள் போராளிகளைத் தேடிப் பிடிக்கும் பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்று கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அரசின் புனர்வாழ்வுக்கு உட்படாமல், மறைந்துள்ள மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியுள்ள முன்னாள் புலி போராளிகளைக் குறிவைத்தே இந்தத் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தீவிரவாத விசாரணைப் பிரிவு மற்றும் ஏனைய அரச புலனாய்வுச் சேவைகள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. அத்துடன் புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இருந்தவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தப் பதிவுகளின் போது, புனர்வாழ்வுக்கு உட்படாத முன்னாள் புலி போராளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்புவதா இல்லையா என்பதை புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் முடிவு செய்யவுள்ளனர்.

எனினும் எவரும் கைது செய்யப்படப் போவதில்லை என்றும் முன்னாள் புலிபோராளிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment