Monday, April 23, 2012இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் இந்தியாவிற்கு அழைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை விஜயம் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள அறிக்கையை தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலவந்தமாக தீர்வுத் திட்டமொன்றை எட்டாமல் நீண்ட காலம் நிலைத்திருக்கக் கூடிய வகையிலான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும் என தெரிவிக்கப்படுகிறது.
13ம் திருத்தச் சட்ட மூல அமுலாக்கம் தொடர்பில் அரசாங்கத்துடன் பிரத்தியேகமாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தீர்மானித்துள்ளது.
No comments:
Post a Comment