Monday, April 23, 2012

13ம் திருத்தச் சட்டம் என்பது இந்தியாவினால் இலங்கை மீது பலவந்தமான முறையில் திணிக்கப்பட்ட ஓர் தேவையற்ற சுமையாகும் - ஜாதிக ஹெல உறுமய!

Monday, April 23, 2012
இலங்கை::13ம் திருத்தச் சட்டம் என்பது இந்தியாவினால் இலங்கை மீது பலவந்தமான முறையில் திணிக்கப்பட்ட ஓர் தேவையற்ற சுமையாகும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியதில்லை.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை முன்மொழிவுகள் தொடர்பில் கூட்டணி கட்சிகளின் கருத்துக்களை கோரும் ஜனாதிபதியின் முயற்சி வரவேற்கப்பட வேண்டியது.

ஜாதிக ஹெல உறுமய கட்சி 13 பிளஸ், 13 அல்லது 13 மைனஸிற்கு ஆதரவளிக்காது.

தமிழ் மக்களுக்கு 13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென்ற தேவை கிடையாது.

இன ரீதியாக, மத ரீதியாக, பிரதேச ரீதியாக பிளவடைந்து வாழ வேண்டுமென பொதுமக்கள் கருதவில்லை.

தமிழ் மக்கள் அமைதியான முறையில் வாழ்வதற்கே விரும்புகின்றனர் என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment