Saturday, April 28, 2012

ஒசாமா நினைவு தினம்:அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!

Saturday, April, 28, 2012
இஸ்லாமாபாத்::சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டு, ஓராண்டு நிறைவடைவதையொட்டி, தாக்குதல் நடக்கலாம் என்பதால், பாகிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டினரை, எச்சரிக்கையுடன் இருக்கும்படி, அமெரிக்கா உஷார்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த, அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன், கடந்த ஆண்டு மே மாதம், அமெரிக்க அதிரடி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மே மாதம் முதல் வாரத்தில், ஒசாமாவின் முதலாமாண்டு நினைவு தினம் வருவதால், பாகிஸ்தானில் தங்கியுள்ள அமெரிக்கர்கள் மீது, தாக்குதல் நடக்கலாம் என கருதப்படுகிறது. இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், சந்தைகள் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் போது, எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், கூடிய வரையில், அந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்கும்படியும், அமெரிக்க அரசு, தங்கள் நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment