Saturday, April, 28, 2012இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுரையீரல் சம்பந்தமான நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக முன்னாள் இராணுவத் தளபதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனோமா பொன்சேகா குறிப்பிட்டார்.
இதன் பிரகாரம் விசேட வைத்திய நிபுணர் ஒருவரின் ஆலோசனைக்கமைய சரத் பொன்சேகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள முன்னாள் இராணுவத் தளபதிக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று முன்தினம் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு உத்தரவிட்டது.
சரத் பொன்சேகாவின் உடல்நலன் தொடர்பில் விசேட வைத்திய நிபுணர்கள் சமர்ப்பித்த அறிக்கையை ஆராய்ந்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
No comments:
Post a Comment