Wednesday,April,18, 2012இலங்கை::இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய குழுவுடன் த.வி.கூட்டணி,(பத்மநாபா.ஈ.பி.ஆர்.எல்.எவ்,) புளொட் தலைவர்கள் சந்திப்பு:-
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய சர்வ கட்சி பாராளுமன்ற குழுவினரை தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, (பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ்.) செயலாளர் நாயகம் தி.சிறீதரன் மற்றும் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர் மாலை கொழும்பில் சந்தித்து நாட்டின் தற்போதைய நிலவரங்கள் குறித்து விபரமாக கலந்துரையாடியுள்ளார்கள்.
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது மேற்படி தலைவர்களால் இந்திய சர்வகட்சி பாராளுமன்ற குழுவினரிடம் தமிழ் மக்களினதும் நாட்டினதும் நிலைமைகள் தொடர்பாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இம் மகஜரில் குறிப்பிட்ட விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடிய தூதுக்குழுவினர் இவை குறித்து தாங்கள் இந்திய அரசுக்கு எடுத்துரைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment