Tuesday, April 17, 2012

தி.மு.க., அ.இ.தி.மு.க இலங்கைக்கு விஜயம் செய்யாமை பாதிப்புக்களை ஏற்படுத்தாது - அரசாங்கம்!

Tuesday, April, 17, 2012
இலங்கை::தமிழகத்தின் முக்கிய கட்சிகளாக அனைத்து இந்திய திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியன இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாராளுமன்றக் குழுவில் அங்கம் வகிக்காமை பாதிப்புக்களை ஏற்படுத்தாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்மை நிலைமைகளை அறிந்து கொண்டு, அரசாங்கத்தை பாராட்டுவார்கள் என வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற வலயங்களில் கடந்த மூன்றாண்டுகளில் அரசாங்கம் பாரியளவில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முக்கிய கட்சி உறுப்பினர்கள் விஜயத்தில் கலந்து கொள்ளாத போதிலும், ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இந்த விஜயம் நடைபெறும் பெறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் தொடர்பிலும், யுத்தத்தின் பின்னரான மீள் குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்திய அரசாங்கம் தெளிவாக புரிந்து கொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு சாத்தியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment