Tuesday, April, 17, 2012சென்னை::இலங்கை பயண அறிக்கையை எம்.பி.க்கள் தனியாக பிரதமரிடம் வழங்க கூடாது என்றும், குழுத்தலைவர் மூலமாகவே வழங்க வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது குறித்து பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கை தமிழர் படுகொலை நடந்த போதெல்லாம் அது குறித்து எந்த அறிக்கையும் கொடுக்காமல், தமிழர் அழிவை பற்றி கவலைப்படாமல், தமிழர்களின் அழிவுக்கு காரணமான இலங்கை அரசுக்கு துணையாக நின்ற மத்திய காங்கிரஸ் கட்சி 3 ஆண்டுகளுக்கு பிறகாவது தமிழர்களின் நிலையை பற்றி தெரிந்து கொள்ள குழுவை அமைத்துள்ளது. காலம் கடந்ததாக இருந்தாலும் வரவேற்கத்தக்கது.
பாராளுமன்ற குழுத்தலைவர் சுஷ்மா சுவராஜை சந்தித்து, தமிழர்கள் தம் சொந்த மண்ணில் சகல உரிமையோடு எவ்வித அச்சமும் இன்றி தலை நிமிர்ந்து வாழும் சூழ்நிலையை இலங்கை அரசு உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்'.
தங்கள் பயணம் குறித்து தனியாக அறிக்கை தயாரித்து பிரதமரிடம் வழங்குவோம் என்று இந்த குழுவில் செல்லும் காங்கிரஸ் எம்.பி. சித்தன் கூறியிருக்கிறார். இதை அவர் தவிர்க்க வேண்டும். குழுத்தலைவர் மூலமாக பிரதமருக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment