Tuesday, April, 17, 2012சென்னை::இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதாக வெளியான செய்திகளை தமிழக அரசாங்கம் முதல் தடவையாக நிராகரித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 2 திகதி தமிழத்தில் இருந்து வந்த மீனவர்கள் சிலர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும் இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த தகவலில் உண்மை இல்லை என தெரியவந்துள்ளதாக, தமிழக மீன்பிடித்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 2ம் திகதி அவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் எவையும் நடைபெறவில்லை எனவும், அன்று தொழிலுக்கு சென்ற 504 மீன்பிடி படகுகளும், அடுத்தநாள் காலை பாதுகாப்பாக கரை திரும்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இவ்வாறான தாக்குதல் சம்பவங்களை கண்டித்து, முதல்வர் ஜெயலலிதா,
கடந்த 10 மாதங்களில் ஆறு கடிதங்களை அனுப்பி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment