Tuesday, April 17, 2012

போலிப் பெயர்களைப் பயன்படுத்தி வரும் இலங்கையர்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் விசாரணை!

Tuesday, April, 17, 2012
இலங்கை::போலிப் பெயர்களைப் பயன்படுத்தி வரும் இலங்கையர்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இவ்வாறு போலிப் பெயர்களுடன் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலிகள், வடக்கு ஆயுதக் குழுக்கள் மற்றும் ஜே.வி.பி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இவ்வாறு வேறும் பெயர்களைப் பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஐரோப்பா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகளில் போலிப் பெயர்களுடைய இலங்கையர்கள் வாழ்ந்து வருகின்றனர். இலங்கையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போலிப் பெயர்களைப் பயன்படுத்தி வாழ்நது வருகின்றனர்.

பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய நபர்கள் இவ்வாறு போலிப் பெயர்களைப் பயன்படுத்தி வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு போலிப் பெயர்களைப் பயன்படுத்தி வாழ்ந்து வரும் நபர்கள் பற்றிய தகவல்களை திரட்டி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment