Tuesday, April 17, 2012

கிழக்கில் அந்த மாகாணத்தைச் சேர்ந்தவரே முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும்!

Tuesday, April, 17, 2012
இலங்கை::கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக அந்த மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரே தெரிவு செய்யப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உண்மையான அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காகவே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதாகவும், வெறுமனே கொழும்பில் இருந்து கொண்டு அரசியல் செய்வதற்காக இந்தக் கட்சி உருவாக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரே கிழக்கின் முதலமைச்சராக வேண்டும் என்பது காலத்தின் தேவை என அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment