Wednesday, April 18, 2012

செல்போனில் பாட்டு கேட்டபடி தண்டவாளத்தை கடந்த வாலிபர் : ரயில் மோதி பரிதாப சாவு!

Wednesday,April,18, 2012
திருத்தணி::செல்போனில் பாட்டு கேட்டபடி தண்டவாளத்தை கடந்த வாலிபர் ரயில் மோதி பரிதாபமாக இறந்தார். திருத்தணியில் நேற்று நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. திருத்தணி நெமிலியை சேர்ந்தவர் பாலாஜி (38). கேட்டரிங் படித்து விட்டு அமெரிக்காவில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி மம்தா (32). விடுமுறைக்காக திருத்தணி வந்துள்ளனர். நேற்று மாலை 6.30 மணியளவில் பாலாஜி வெளியேபோய் வருவதாக வீட்டில் கூறிச்சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் கமலா தியேட்டர் அருகே ரயில் தண்டவாளத்தில் பாலாஜி இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. இதையறிந்ததும் மம்தா மற்றும் அவரது உறவினர்கள் விரைந்து சென்றனர். தண்டவாளத்தில் தலை, கை பகுதியில் பலத்த காயத்துடன் இறந்த கிடந்த பாலாஜி சடலத்தை பார்த்து மனைவி கதறி அழுதார்.

பாலாஜி ஹெட் போனில் பாட்டு கேட்டபடி தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது நெல்லூரில் இருந்து திருத்தணி வழியாக சென்ட்ரலுக்கு சென்ற மின்சார ரயில் வந்தது. தண்டவாளத்தின் குறுக்கே வாலிபர் ஒருவர் கடந்து செல்வதை பார்த்தும் டிரைவர் ஹாரன் அடித்துள்ளார். இதை கவனிக்காமல் பாலாஜி தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளார். இதனால் விபரீதத்தை உணர்ந்த இன்ஜின் டிரைவர் ரயில் வேகத்தை குறைத்துள்ளார். அதற்குள் ரயில் பாலாஜி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துள்ளார். விபத்து குறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

No comments:

Post a Comment