Wednesday,April,18, 2012இலங்கை::இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர் குழுவிற்கு நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்கள் பற்றி தெளிவுபடுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகள் மற்றும் அரசாங்கத்தின் முன்னுரிமைகள் பற்றி தெளிவுபடுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆணைக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் குறிப்பிட்ட சில முகவர் நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து விளக்கம் அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் சில கேள்விகளை எழுப்பியதாகவும் நல்லிணக்க முனைப்புக்களுக்கு மெய்யாகவே ஆதரவளிக்கும் இந்தியாவின் நோக்கம் அந்தக் கேள்விகளின் மூலம் தெளிவானதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13ம் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதிநிதிகள் குழுவினர் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் எதனையும் பிரயோகிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்கள் மற்றும் நட்டின் மெய்யான நிலைமை குறித்து தமிழகத்திற்கு போதியளவு தெளிவுபடுத்துவது உசிதமானது என பிரதிநிதிகள் குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
இரு இன சமூகங்களுக்கும் இடையில் நிலவி வரும் ஐயங்கள் களையப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment