Saturday, April, 21, 2012இலங்கை::கொழும்பு அஞ்சல் பறிமாற்றகத்தில் வெளிநாட்டு பொதிகள் பிரிவில் 'ஹஷீஸ்' எனப்படும் போதைப்பொருள் அடங்கிய சஞ்சிகையோடு, பொதியொன்று அனுப்பப்பட்டமை தொடர்பில் பிரபல நடிகை ஒருவரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கடந்த 18 ம் திகதி பிரதான அஞ்சல் பறிமாற்று மத்திய நிலையத்துக்கு கிடைக்கப் பெற்ற குறித்த பொதியை பெற்றுக் கொள்ள சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தற்போது, காவல்துறையின் போதைப் பொருள் பிரிவின் உத்தரவுக்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்..
No comments:
Post a Comment