Saturday, April, 21, 2012இலங்கை::தம்புள்ள புனித பூமி பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கட்டங்களை நிர்மானிக்க அனுமதியளிக்கப்படவில்லை என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
பௌத்த சாசன அமைச்சைப் பொறுப்பேற்றதன் பின்னர் தம்புள்ள பௌத்த புனித பூமி பிரதேசத்தில் கட்டடங்களை நிர்மானம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புனித பூமியில் சட்டவிரோத கட்டடங்கள் அமைக்கப்பட்டதாக இதுவரையில் தமக்கு எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப் பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத கட்டடங்கள் நிர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களின் வெளியான தகவல்களை அடுத்து இது தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment