Wednesday,April,25,2012இலங்கை::நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்களை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழப்ப முயற்சிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முனைப்புக்கள் நாட்டின் நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களுக்கு தனியான நிர்வாக அலகு கோரும் முஸ்லிம் காங்கரஸின் கோரிக்கை ஆபத்தானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் நடவடிக்கை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய நலனுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவது பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு காணி காவல்துறை அதிகாரங்கள் தீர்வாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, முஸ்லிம்களுக்கு தனியானா நிர்வாக அலகு வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்படக் கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். நாட்டின் சகல இன மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment