Wednesday, April 25, 2012

தமிழகம் முழுக்க ரூ.104 கோடியில் 16 துணை மின் நிலையங்கள் தொடக்கம்!

Wednesday,April,25,2012
சென்னை::தமிழகம் முழுவதும் ரூ.104 கோடி செலவில் அமைக்கப்பட்ட 16 துணை மின்நிலையங்கள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட 4 துணை மின்நிலையங்களை முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று திறந்து வைத்தார். மின் பாதையில் ஏற்படும் மின் சக்தி இழப்பை குறைக்கவும், சரியான அழுத்தத்துடன் சீரான மின்சாரம் வழங்கவும் தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய துணை நிலையங்களை அமைத்து வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் ராஜகீழ்பாக்கத்தில் ரூ.7.84 கோடி செலவிலும், கோவிலம்பாக்கத்தில் ரூ.6.38 கோடியிலும்,

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் ரூ.1.27 கோடி செலவிலும் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை உள்பட தமிழகம் முழுவதும் ரூ.104 கோடியே 2 லட்சத்து 86 ஆயிரம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 16 துணை மின் நிலையங்கள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட 4 துணை மின் நிலையங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார். சென்னை கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த துணை மின் நிலையங்களை அவர் திறந்தார். நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூடங்குளம் மின்சாரம் பிரதமருக்கு ஜெ. கடிதம்!

சென்னை::பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பாக கடந்த மார்ச் 31ம் தேதி நான் உங்களுக்கு கடிதம் எழுதினேன். இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. இந்நிலையில் அணுமின் நிலையத்தில் உள்ள 1000 மெகாவாட் திறன் கொண்ட முதல் யூனிட்டில் அடுத்த சில தினங்களில் எரிபொருள் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட இருப்பதாக அறிகிறேன். அடுத்த 20 நாட்களில் அணுசக்தி தூண்டப்பட்டு முதல் யூனிட்டில் மின்சாரம் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் எனது முந்தைய கோரிக்கையை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன். இந்த விஷயத்தில் தமிழ்நாட்டின் கோரிக்கை முற்றிலும் நியாயமானது என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன். உங்களிடமிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

பிரமாண்ட கலையரங்கம் சட்டசபையில் ஜெ. அறிவிப்பு!

சென்னை::கலைவாணர் அரங்கம் இடிக்கப்பட்ட இடத்திலேயே பிரமாண்ட கலையரங்கம் கட்டப்படும் என்று சட்டசபையில் இன்று ஜெயலலிதா அறிவித்தார். சட்டசபையில் இன்று சுற்றுலாத்துறை மற்றும் மீன்வளத்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. இதில் பீமாராவ் (மார்க்சிஸ்ட்) பேசுகையில் குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, ‘‘கடந்த திமுக ஆட்சியில் கலைவாணர் அரங்கம் இடிக்கப்பட்டதாகவும், இன்று வரை அந்த இடம் காலியாக இருப்பதாகவும் உறுப்பினர் இங்கே குறிப்பிட்டார். விரைவில் அந்த இடத்தில் பிரமாண்டமான கலையரங்கம் கட்டப்படும்’’ என்றார். அமைச்சர் சிவபதி: நாட்டுப்புற கலைஞர்கள் இந்த அரசால் ஊக்குவிக்கப்படுகின்றனர். 500 கலைஞர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் விரைவில் வழங்கப்படும்.

No comments:

Post a Comment