Wednesday,April,25,2012இலங்கை::இந்திய கடல் எல்லையை மீறியமைக்காக அந்த நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து இலங்கை மீனவர்கள் கரையோர பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மீனவர்கள் கரையோர பாதுகாப்புப் பிரிவினரால் நேற்று மாலை சர்வதேச கடல் எல்லையில் காங்கேசன்துறை பிரதேசத்தில் இலங்கை கரையோர பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த பிரிவின் ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் புலேகொட ஆராச்சி தெரிவித்தார்.
இந்த மீனவர்களுடன் மீன்பிடி படகொன்றும் விடுவிக்கப்பட்டுள்ளதாக கரையோர பாதுகாப்புப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
திருகோணமலையில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களே இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.
இலங்கை மீனவர்கள் ஐவரும் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக லெப்டினன் கொமாண்டர் புலேகொட ஆராச்சி மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment