Thursday, April 19, 2012

வாழ்த்து மடலில் போதைப்பொருள்; வெளிநாட்டவர் கைது!

Thursday, April, 19, 2012
இலங்கை::கொழும்பு மத்தியதபால் பரிமாற்றகத்திற்கு கிடைக்கப்பெற்றிருந்த தபால் பொதியொன்றில் இருந்து ஒரு தொகை போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு பெண் ஒருவரின் பெயரில் மூன்று தபால் பொதிகள் கிடைத்துள்ளன. இந்த பொதிகளை சோதனையிட்டபோது வாழ்த்து மடல்
போன்ற மடலொன்றிற்குள் இருந்து போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த பொதிகளை கொண்டு செல்வதற்காக வெளிநாட்டவர் ஒருவர் வருகைத் தந்துள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment