Thursday, April 19, 2012

அதிகாரபரவலாக்கலை பெருபான்மையான சிங்கள மக்கள் எதிர்ப்பதாக கூறுவது பொய் சந்திரிகா!

Thursday, April, 19, 2012
இலங்கை::தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக முன்மவைக்கப்படும் அதிகாரபரவலாக்கலை பெருபான்மையான சிங்கள மக்கள் எதிர்ப்பதாக தற்போதைய அரசாங்கத்தில் உள்ள சிலர் முன்னெடுத்து வரும் பிரசாரம் உண்மைக்கு புறம்பானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள அவர், இந்திய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார். அதிகாரப்பரவலாக்கலை சிங்களவர்கள் எதிர்க்கின்றனர் என கூறுவது யார்?. நான் ஜனாதிபதியாக இருந்த போது, எம்லிப்பிட்டியவில் நடைபெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றின் போது, தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் எனக் கூறினேன். அப்போது மேடையில் இருந்த எமது கட்சியை சேர்ந்தவர்கள் இது குறித்து அதிகம் பேசவேண்டாம் என தெரிவித்தனர். வாக்குகள் கிடைக்காமல் போகும் என அவர்கள் காரணம் கூறினர். எனினும் நான் உரையை முடித்த பின்னர், மக்கள் எனது நிலைப்பாட்டு ஆதரவாக கரகோஷம் செய்தனர். இதன் பின்னர் தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்பட வேண்டும் என நான் தொடர்ந்தும் கூறிவந்தேன். இதற்கு நல்ல ஆதரவு கிடைத்தது. தமிழ் மக்களுக்கு அதிகாரப்பரவலாக்கத்தை வழங்கக் கூடாது என எதிர்ப்பவர்கள் 5 வீதமான சிங்கள அடிப்படைவாதிகள் மாத்திரமே எனவும் சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment