Thursday, April, 19, 2012இலங்கை::யாழ். தொண்டமனாறு, செல்வசந்நிதி பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இனைஞன் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பிரேத பரிசோதனையின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்ட தடயங்கள், சாட்சியங்களின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இளைஞன் கடந்த 13 ஆம் திகதி மாலை காணாமல்போயுள்ளதாக குறித்த இளைஞனின் பெற்றோரினால் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்படி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில் தொண்டமனாறு பகுதியிலுள்ள தென்னந்தோட்டத்தில் இருந்து இந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டதாகவும், குறித்த சடலம் அண்மையில் காணாமற்போன சிவலிங்கம் சிவகுமாரன் என்ற 18 வயதுடைய இளைஞனின் சடலமெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment