Friday, April 20, 2012

இன்று இந்திய-அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநாடு

Friday, April, 20, 2012
புதுடில்லி::பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டுதல் உள்ளி்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்திய-அமெரிக்கா இடையேயான உள்நாட்டு பாதுகாப்பு மாநாடு இன்று டில்லியில் நடக்கிறது. இம்மாநாட்டில் இந்திய உள்துறை செயலர் மற்றும் அமெரிக்க அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொள்கி்‌ன்றனர்.

இந்திய- அமெரிக்கா உள்நாட்டு பாதுகாப்பு மாநாடு கடந்த ஆண்டு மே மாதம் நடந்தது. இதில் உள்‌துறை அமைச்சர் சிதம்பரம், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் நெப்போலிடினோ ஆகியோர் கலந்து ‌கொண்டனர். இதில் இரு நாடுகளிடையே பயங்கரவாத தடுப்பு, பயங்கரவாதத்திற்கு ஆதரவாக நித திரட்டுவதை கட்டுப்படுத்துவது, கள்ள நோட்டு புழக்கம் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று நடக்கவுள்ள உள்நாட்டு பாதுகாப்பு மாநாட்டில் உள்துறை செயர் ஆர்.கே.சிங், அமெரிக்‌க உள்நாட்டு பாதுகாப்பு இணை அமைச்சர் ஜானேலூட் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.இந்த மாநாட்டில் சமீபத்தில் பாகிஸ்தானைச்சேர்ந்த பயங்கரவாதி ஹபீஸ் சையத் தலைக்கு அமெரி்க்கா 10 மில்லியன் டாலர் அறிவித்தது குறித்தும், இந்திய -அமெரிக்கா இடையே புலனாய்வு தகவல்களை பரிமாறி்க்கொள்ளுதல், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment