Friday, April, 20,2012 இலங்கை::இந்திய பாராளுமன்ற குழுவின் இலங்கை விஜயத்தின் மூலம் இந்தியாவில் நிலவும் இலங்கை தொடர்பான தப்பபிப்பிராயத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பதாக பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.
யாழ்ப்பாணத்தில் இந்தியக் குழு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர்கள் யுத்தத்தின் பின் வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை நேரில் பார்வையிட்டுள்ளதோடு அவை தொடர்பில் திருப்தியும் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது, இந்திய குழுவின் இலங்கை விஜயம் குறித்து அரசாங்கம் மகிழ்ச்சி அடைகிறது. இந்த விஜயம் இலங்கைக்கு மிக முக்கியமான தாகும்.
வடபகுதி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படும் நிலையில் இந்தியக் குழுவுக்கு நேரடியாக உண்மை நிலையை காண சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
2009 மே மாதம் யுத்தம் முடிவடைந்து 3 வருடங் கள் கூட நிறைவடையாத நிலையில் அரசாங்கம் பொறுப்புடன் வடக்கு, கிழக்கு முன்னேற்றத் துக்கு பங்களித்தது. நாட்டின் ஏனைய பகுதி மக்கள் அனுபவிக்கும் உரிமைகள் மற்றும் சலுகைகள் வட பகுதி மக்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜெனீவா மாநாட்டில் வட பகுதி குறித்து குற்றஞ் சாட்டப்பட்டது.
தமிழ், நாட்டிலும் இந்தியாவிலும் கூட தவறான அபிப்பிராயம் பரப்பட்டது. ஆனால் இந்திய குழு வடக்கிற்கு சென்று அந்த மக்களை சந்தித்து உண்மை நிலைமையை ஆராய்ந்தது.
250,000 மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். 200 குடும்பங்கள் மட்டுமே வேறு இடங்களில் தற்காலிகமாக குடியேற்றப்பட்டுள்ளார்கள். மிதிவெடி அகற்றப்பட்ட பின் அவர்களும் சொந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர். மேலும் 3400 பேரே முகாம்களில் உள்ளனர். அவர்கள் ஜுன் 30 இக்குள் மீள் குடியேற்றப்படுவர்.
வடக்கு மக்களுக்கு அரசாங்கமோ படையினரோ எதுவித அழுத்தமோ தடங்களோ ஏற்படுத்தவில்லை என மக்கள் இந்திய குழுவிடம் கூறியுள்ளனர். அவர்களுக்கு சுதந்திரமாக எங்கும் செல்ல இடமளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் இடம்பெற்றுள்ள துரித அபிவிருத்தி குறித்து இந்திய குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. வடக்கு மக்களின் தற்போதைய நிலைமை குறித்து இந்திய குழு தெளிவு பெற்றுள்ளது.
இந்திய உதவியுடன் நிர்மாணித்த 250 வீடுகளை அவர்கள் மக்களிடம் கையளித்தனர். முதற்கட்டமாக 1000 வீடுகள் கட்டப்படுகின்றன.
இந்திய பாராளுமன்ற குழு இந்தியா சென்று உண்மை நிலைமையை தெளிவுபடுத்தும் என நம்புகிறோம்.
இந்திய குழு இலங்கை குறித்து கண்காணிக்க வந்துள்ளதா என எழுப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், இந்திய குழு இலங்கையில் கண்காணிப்பிற்காக வரவில்லை. அது தொடர்பில் எதுவித சந்தேகமும் கிடையாது. இது கண்காணிப்பல்ல. அரசாங்கம் யுத்தத்தின் பின் தனது பொறுப்பை நிறைவேற்றியிருப்பது குறித்து நேரில் காணவே அவர்கள் வந்துள்ளனர். ஏனென்றால் இது இந்தியாவுடனும் தொடர்புள்ள விடயமாகும் என்றார்....
No comments:
Post a Comment