Sunday, April 22, 2012

இலங்கை விஜயம் - பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அறிக்கை கையளிக்கப்படவுள்ளது!

Sunday, April, 22, 2012
சென்னை:.இலங்கை விஜயம் - பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அறிக்கை கையளிக்கப்படவுள்ளது:-

தாயகம் திரும்பியுள்ள நாடாளுமன்ற குழுவினர், தமது இலங்கை விஜயம் தொடர்பான பூரண அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளனர்.

இந்த அறிக்கை இன்று அல்லது நாளை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்ஷண நாச்சியப்பன் சென்னையில் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும் போதே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் குறிப்பாக இடம்பெயர்ந்த நிலையில் உள்ள தமிழ் மக்களின் தற்போதைய நிலை உட்பட பல விடையங்கள் கோடிட்டு காட்டப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி முதல் நேற்று வரை, இலங்கையில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தாம் நேரடியாக அவதானித்தவற்றை இந்த குழுவினர் அறிக்கையாக சமர்ப்பிக்கவுள்ளதாகவும் சுதர்ஷண நாச்சியப்பன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment