Sunday, April, 22, 2012இலங்கை::வாக்காளர் பட்டியலில் வேண்டுமென்றே இரட்டை பதிவை மேற்கொண்ட சுமார் 500 யிற்கும் அதிகமானோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது.
போலியான தகவல்களை வழங்கி இரட்டை பதிவை மேற்கொண்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிடுகின்றார்.
இவவாறு அடையாளம் காணப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வாக்காளர் பெயர் பட்டியலை ஆராய்ந்த போது சுமார் ஒரு இலட்சத்து 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இரட்டை பதிவை மேற்கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் ஆயிரத்து 474 பேர் மூன்று மாவட்டங்களில் தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
13 பேர் நான்கு மாவட்டங்களில் தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கிறது. மேலும் கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கைகளின்போது இரட்டை பதிவுகளை மேற்கொண்ட ஒன்பதாயிரத்து 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment