Sunday, April 22, 2012

துப்பாக்கியுடன் இரு இளைஞர்கள் கைது!

Sunday, April, 22, 2012
இலங்கை::இதுருவ பிரதேசத்தில் ரி-56 ரக துப்பாக்கியுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி இதுருவ பிரதேச மைதானத்திற்கு அருகில் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்திவிட்டு இவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இவர்கள் நேற்றைய தினம் கொஸ்கொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment