Sunday, April 22, 2012

பிரான்ஸ் அதிபர் தேர்தல் புதுச்சேரியில் வாக்குபதிவு!

Sunday, April, 22, 2012
புதுச்சேரி::பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கு புதுவையில் இன்று வாக்குப் பதிவு நடந்தது. பிரான்ஸ் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் 2 கட்டமாக நடக்கிறது. பிரான்ஸ் அதிபர் சர்கோசி இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரான்கோசிஸ் ஹோலன்டே மற்றும் 8 பேர் களத்தில் உள்ளனர். இதன் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. புதுவையில் உள்ள பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிக்க வசதியாக புதுவையில் 4 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. பிரான்ஸ் தூதரக அலுவலகத்தில் 2 வாக்குச் சாவடிகள், பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் மற்றும் விஜய் பிரான்சிஸ் பள்ளியில் தலா ஒரு வாக்குச் சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது. புதுவையில் பிரான்ஸ் குடியுரிமை பெற்ற 5,259 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மாகே, ஏனாம் மற்றும் சென்னையில் வசிக்கும் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிக்க, சென்னையில் ஒரு வாக்குப் பதிவு மையமும், காரைக்காலில் ஒரு வாக்கு பதிவு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய தேர்தலில் அதிக வாக்குகள் பெறும் இருவர் அடுத்த கட்டமாக மே 6ம் நடக்கும் 2ம் கட்ட தேர்தலுக்கு தகுதி பெறுவர். பிரான்ஸ் முழுவதும் 4.4 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment