Sunday, April 15, 2012

இந்திய நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் குழுவை: தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு சந்திக்கும்!

Sunday, April 15, 2012
இலங்கை::இந்திய நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தலைமையில் நாளை இலங்கை வரும் இந்திய சர்வகட்சிக் குழுவை தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் குழு 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் என கூட்டமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார்.

தமிழ் நாடு ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் இக் குழுவிலிருந்து விலகிக் கொண்டாலும் இந்திய சர்வ கட்சிக் குழு இலங்கை வருவது உறுதி என வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

18,19ஆம் திகதிகளில் நாட்டுக்கு விஜயம் செய்யும் இந்திய சர்வ கட்சிக் குழுவை 18ஆம் திகதி மாலை 6.45 மணிக்கு யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் யாழ்ப்பாணம் டிஸ்கோ ஹோட்டலில் வரவேற்பார்.

இந்திய சர்வ கட்சிக் குழுவின் யாழ். குடாநாட்டு விஜயம் தொடர்பான ஒழுங்குகளை யாழ்ப்பாணத்திலுள்ள உதவி இந்தியத் தூதரக கவுன்சிலர் எஸ்.மகாலிங்கம் மேற்கொண்டுள்ளதாகவும், இக்குழுவினர் எங்கு செல்வார்கள் யாரைச் சந்திப்பார்கள் என்பது குறித்து தமக்கு எதுவும் தெரியாதென யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்
.

No comments:

Post a Comment