Monday, April 02, 2012இலங்கை::கடவத்தை பகுதியில் வைத்திய அதிகாரி ஒருவரி்ன் வீடடில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நான்கு கடற்படை உறுப்பினர்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த நான்கு கடற்படை உறுப்பினர்கள் தொடர்பிலேயே முறைப்பாடு கிடைத்துள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரியவிடம் வினவியபோது, கடற்படை உறுப்பினர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஒழுக்காற்று பாதுகாப்புத் திணைக்களத்தினூடாக விசாரணை நடத்தப்படுவதாக கூறினார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையின்போது குறித்த கொள்ளை சம்பவத்துடன் கடற்படை உறுப்பினர்கள் நால்வர் தொடர்புபட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment