Monday, April 02, 2012இஸ்லாமாபாத்::பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, 8ம் தேதி டெல்லி செல்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, தனது அஜ்மீர் பயணம் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த 2005ம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப் இந்திய பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு இப்போதுதான் பாகிஸ்தான் அதிபர் ஒருவர் முதல் முறையாக இந்திய பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து சர்தாரியின் செய்தித் தொடர்பாளர் பர்ஹத்துல்லா பாபர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியா வருமாறு சர்தாரிக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்திருந்தார். அதை சர்தாரியும் ஏற்று வரும் 8ம் தேதி டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மன்மோகன் சிங் அளிக்கும் மதிய விருந்தில் பங்கேற்கிறார். இருநாட்டு தலைவர்களும் சந்தித்த பின், அதிபர் சர்தாரி தனிப்பட்ட பயணமாக அஜ்மீர் தர்கா செல்கிறார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அன்றைய தினமே சர்தாரி பாகிஸ்தான் திரும்புவார்.
No comments:
Post a Comment