Monday, April 02, 2012இலங்கை::மனித உரிமை என்ற பெயரில் இந்நாட்டு மக்களின் மரபுரிமைகளை சிதைக்கத் தயாராகாதீர்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று முன்தினம் கண்டியில் தெரிவித்தார். பயங்கரவாதத்திடமிருந்து மீட்டெடுத்த நாட்டை அதே பயங்கரவாதத்திடம் மீண்டும் ஒப்படைக்க முடியாது.
நாட்டுக்குள் தப்பபிப்பிராயங்களையும், தூண்டி விடும் நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்குச் சிலர் முயற்சி செய்கின்றனர். அவற்றைக் கண்டு ஏமாறாது எம்முடன் இணைந்து எமது எதிர்கால சந்ததியினருக்கு வளமானதும் சுதந்திரமானதுமான நாட்டைப் பெற்றுக்கொடுக்க முன் வாருங்கள் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.
‘ஒரே நாடு, ஒரே தேசியம்’ என்ற தொனிப் பொருளில் கண்டி, போகம்பறை மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில் நீங்கள் இங்கு கூடி அளிக்கின்ற ஒத்துழைப்பானது அரசாங்கத்திற்கான ஆதரவாக மாத்திரமல் லாமல் ஏகாதிபத்தியத்திற்கும், பிரிவினை வாதத்திற்கும் எதிரான அணித்திரள்வாகவும் அமைந்திருக்கின்றது.
இந்த நாட்டின் சுதந்திரத்தை ஆயிரக் கணக்கான வருடங்கள் பாதுகாத்த கண்டி மக்கள் முன்பாக உரையாற்றுவதில் பெரிதும் சந்தோஷப்படுகின்றேன். இன்று நாட்டின் சுதந்திரம் மிகவும் முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கின்றது. நாட்டின் சுதந்திரத்தை ஆயிரக்கணக்கான வருடங்கள் பாதுகாத்த கண்டி மக்கள் இன்னும் அந்த கெளரவத்துடன் வாழ்ந்துகொண்டி ருக்கின்றார்கள். அதனை நாம் இங்கு தெளிவாகக் கூறுகின்றோம்.
அமெரிக்கா இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வந்தபோது அதற்கு எதிராக முதலில் முன்வந்து கையெழுத் திட்டது மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளே என்பதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். இந்த நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதற்காக இங்கு வாழுகின்ற பெளத்த மதகுருமாரின் சக்தியையே இந்த செயற்பாடு வெளிப் படுத்தியது. அதனைத் தொடர்ந்து எல்லா மதத் தலைவர்களும் குறிப்பாக இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதத் தலைவர்களும் நாட்டுக்காக முன்வந்தார்கள்.
அதேநேரம் தேசியக் கொடியை ஏந்திய வண்ணம் நாடு பூராகவும் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் செய்த மக்கள் தொடர்பாக உங்களுக்கு புதிதாக ஒன்றும் கூறத் தேவை இல்லை. இவற்றின் ஊடாக எமக்குப் பாரிய சக்தி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என நாம் நம்பு கின்றோம்.
எமது மக்களை ஐரோப்பிய நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும். ஏனைய நாடுகளில் தலையீடு செய்து அரசாங்கத்தைக் கவிழ்த்து தலைவர்களைக் கொலை செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகளை நாம் பார்த்தோம். மக்களை வெளியே எடுத்து எதிரான செயல்களை மேற்கொண்ட விதங்களை நாம் கண்டோம். ஆனால் எமது மக்கள் அச்செயற்பாட்டுக்கு மாற்றமாக ‘தம் உயிரைத் தியாகம் செய்தாவது நாட்டையும், நாட்டுத் தலை வரையும் பாதுகாப்போம்.’ எந்தச் சக்திக் கும் எதிராக வீதியில் இறங்கி போராடு வோம் என்று பகிரங்கமாகக் கூறி வீதியில் இறங்கினார்கள். இதன் காரணத்தினால் தான் ஆயிரக்கணக்கான வருடங்கள் இந்நாட்டு சுதந்திரத்தைப் பேணி பாதுகாத்த பெருமையுடன் இன்னும் கண்டி மக்களால் கெளரவத்துடன் வாழும் வரலாறு கிடைக்கப்பெற்றது.
ஏகாதிபத்தியவாதிகள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னிருந்தே எமது நாட்டை கைப்பற்ற முயற்சித்தனர். ஒல் லாந்தர், போத்துக்கேயர், ஆங்கிலேயர் என பலர் இவ்வாறு முயற்சி செய்தனர். அவர்கள் இவ்வாறு பலமுறை எம் நாட்டின் மீது படை எடுத்த போதும் அவர்களால் எம்மை வெற்றிகொள்ள முடிய வில்லை. காரணம் எம் மத்தியில் ஒற் றுமை காணப்பட்டதால் அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் உள்நாட்டு பிரதானிகள் சிலர் அன்றைய மன்னருக்கு எதிராக சதி செய்து ஆங்கிலேயரிடம் நாட்டைக் காட்டிக்கொடுத்ததன் விளைவாகவே ஆங்கிலேயரால் எம்மை ஆக்கிரமிக்க முடிந்தது.
அன்று ஆங்கிலேயர் சமாதானம் என்ற சொல்லை முற்படுத்திக் கொண்டு தான் கண்டிக்குள் நுழைந்தார்கள் என்றாலும் இவர்களுக்கு நாட்டைக் காட்டிக் கொடுத் தவர்களிடம் ஆங்கிலேயர் நாட்டைக் கையளிக்கவில்லை. அன்று கண்டி மக்க ளுக்கு அவர்கள் சமாதானத்தையும் நியா யத்தையும் பெற்றுக்கொடுக்கவில்லை. மாறாக கண்டி மக்களின் காணிகளைப் பறித்தெடுத்து அவர்களது பண்ணைககளில் இருந்த மாடுகளை கொன்று தின்றார்கள். இதனூடாக அந்த மக்களை முழுமையாக ஏழைகளாக்கினார்கள். அதுபோன்றே இன்றும் செய்யப்பார்க்கின்றார்கள்.
இதற்கு அவர்களது எடுபிடிகள் பக்க துணையாக இருக்கின்றார்கள். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கம் அன்று கிராமத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டது போன்று எம்மை ஏமாற்ற முடியாது. இந்த தேசத்தை நேசிக்கின்ற மக்கள் தான் இன்று வாழு கின்றனர் என்றாலும் நாட்டில் சில துரோகிகள் உள்ளனர். சில அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், இன்னும் சிலரும் கனவு கண்டு கொண்டி ருக்கிறார்கள். மஹிந்தவை இழுத்துவந்து தோற்கடிப்போம் என்று இங்கு வந்து கூறுகின்றார்கள். எனினும் அவர்கள் நாட்டின் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன் னர் தமது கட்சியை முதலில் சீரமைத்துக் கொள்ளுவது அவசியம்.
மனித உரிமை என்ற பெயரில் இந்த நாட்டு மக்களின் மரபுரிமையை இல்லாம லாக்க தயாராகாதீர்கள். அதனால் இந்த நாடு சுதந்திரத்தை இழக்க இடமளிக்காதீர்கள் என்று உங்களிடம் சொல்லுகின்றேன். பயங்கரவாதிகளிடமிருந்து இந்த நாடு விடுவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பயங்கரவாதி களிடம் நாட்டை மீண்டும் ஒப்படைத்து விட்டுச் செல்ல முடியாது என்பதை சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
ஆகவே இன்றைய கால கட்டத்தில் மிகவும் அவதானத்துடன் நடந்துகொள்ளு மாறும், நாட்டுக்குள் ஏற்படுத்த முயற்சிக் கப்படுகின்ற தப்பபிப்பிராயங்கள் மற்றும் தூண்டுதல்களுக்கும் ஏமாறாமல் எம்முடன் இணைந்து எமது எதிர்கால சந்ததியினருக்கு சுதந்திரமான நாட்டை பெற்றுக்கொடுக்க முன்வாருங்கள். இவ்வாறான சிறந்த நாடொன்றை பெற்றுக்கொடுத்து வளமான முன்னேற்றத்தை ஏற்படுத்தி உங்களுக்குரிய இந்த நாட்டை பேணிப் பாதுகாத்துக் கொள்கின்றேன்.
நாமெல்லோரும் கடந்த கால வரலாற்றில் சிறந்த பாடங்களைப் படித்து எமது எதிர்காலத்தை வளப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற நாம் தயாராக உள்ளோம் என்றார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேம ஜயந்த், விமல் வீரவன்ச, டியூ குணசேகர, தினேஷ் குணவர்தன, மகிந்தானந்த அழுத்கமகே உட்பட முக் கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
No comments:
Post a Comment