Monday, April 2, 2012

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர் கைது!

Monday, April 02, 2012
இலங்கை::அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர் கைது:-

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படும் ஒருவர் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், நேற்று இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த 2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் புலிகள் இயக்கத்தில், இருந்து இவர் வெளியேறி இருந்ததாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இராணுவ புனர்வாழ்வு நிலையத்தில், புனர்வாழ்வு பெறாமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டதாகவும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த நபர், அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்...

புலி உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்து சிலர் கொட்டாஞ்சேனைல் கைது!

புலிகளின் உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் வர்த்தகத்தில் ஈடுபட்ட சிலர் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த 6 பேர் இந்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் புலி உறுப்பினர்களை அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட ஒருவரிடம் தலா 15 லட்சம் ரூபாவை சந்தேக நபர்கள் அறவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment