Tuesday, April, 17, 2012இலங்கை::வாத்துவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி்க்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
வாத்துவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வாத்துவ போகந்தரமுல்ல பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரே பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த போது, நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பொலிஸ் நிலையத்தின் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபில்களும், சார்ஜன் ஒருவருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment