Tuesday, April, 17, 2012சென்னை::இலங்கைச் சிறைச்சாலையிலுள்ள இந்தியாவைச் சேர்ந்த 34 குற்றவாளிகள், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தூதுக்குழுவின் வருகையுடன் தமக்கு விடிவு கிடைக்குமென்ற நம்பிக்கையில் உள்ளனர்.
இலங்கையும் இந்தியாவும் சிறைக்கைதிகளை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தமொன்றில் 2010ஆம் ஆண்டு கையெழுத்திட்டபோதிலும், நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக எதிர்பார்த்தபடி சிறைக்கைதிகள் பரிமாற்றம் இன்னும் நடைபெறவில்லை.
இலங்கையின் தரப்பில் சகல நடைமுறைகளும் பூரணப்படுத்தப்பட்டுவிட்டன. ஆனால், இந்தியாவில் சிறைச்சாலைகள் மாநில அரசாங்கத்தின் கீழ் வருவதனால் அந்தந்த மாநில அரசாங்கத்தின் அனுமதியை பெறவேண்டியுள்ளது. இதனால் கோவைகள் தேங்கிக்கிடப்பதுடன், அரசாங்க நடைமுறைத் தாமதங்களும் தோன்றியுள்ளன.
இலங்கைச் சிறைச்சாலையிலுள்ள 34 இந்தியக் குற்றவாளிகள் கேரள மற்றும் தமிழ்நாட்டு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பல விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளபோதிலும், இரண்டு மாநில அரசாங்கங்களும் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. 34 குற்றவாளிகளில் 27 பேர் தமிழ்நாட்டையும் 7 பேர் கேரளாவையும் சேர்ந்தவர்கள். இவர்களில் 4 பேர் பெண்களாவர்.
'எவ்வளவோ காலமாக நாம் காத்திருக்கின்றோம். சிலர் இங்கு 10 வருடங்களுக்கும் மேலாக உள்ளனர். இங்குள்ள சிலரால் உதவியின்றி நடக்கக்கூட முடியாது. நாம் பலவீனப்பட்டு ஏலாமல்போயுள்ளோம்' என கைதியொருவர் கூறினார்.
இதேசமயம் பாகிஸ்தானில் கைதிகள் விரைவாக தமது நாட்டுக்கு செல்லக் கூடியதாகியுள்ளது. ஏனெனில் பாகிஸ்தானில் நிர்வாகம் விரைந்து செயற்படுகிறது.
இந்தியக் கைதிகளின் வாழ்வு ஒரு கணம் நம்பிக்கையும் மறுகணம் மனமுறிவும் என்ற வட்டத்தினுள் சுழன்றுகொண்டுள்ளது. முழு சிறைக்காலத்தையும் இலங்கைச் சிறைச்சாலையிலே கழிக்க வேண்டிவருமெனவும் தோன்றுகிறது. துரைமாணிக்கம் என்பவர் அண்மையில் 15 வருட சிறையை முடித்துக்கொண்டு வெலிக்கடை சிறையிலிருந்து வெளியேறினார்.
போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த குற்றத்துக்காகவே அநேகமான இந்தியர்கள் சிறைச்சாலையிலுள்ளனர். இவர்கள் அனைவரும் ஏழைகள். பெரும் பணம் சாம்பாதிக்கும் ஆசையில் குற்றமிழைத்தவர்கள். இலங்கையில் போதைப்பொருட்கள் கடத்துவதற்கு ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்க முடியும்.
குற்றவாளிகளான சகல கைதிகளும் இந்தியாவிலுள்ள சிறைச்சாலைக்கு மாற்றலாக விரும்புகின்றனர்.
(thehindu)
No comments:
Post a Comment