Friday, April 27, 2012

தமிழகத்தில் புலிகளின் ஈழ அரசாங்கத்தை ஸ்தாபிப்பிக்க போகிறதாம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-திவயின!

Friday, April, 27, 2012
இலங்கை::தமிழகத்தில் புலிகளின் ஈழ அரசாங்கத்தை ஸ்தாபிப்பிக்க போகிறதாம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-திவயின!

இந்தியாவை பிளவுப்படுத்தி தமிழகத்தில் புலிகளின் ஈழ அரசாங்கத்தை ஸ்தாபிப்பிக்கும் நோக்கில் அமெரிக்காவில் இருந்து இயங்கும் புலிகளின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனக் கூறி 5 பேரை நியமித்துள்ளதாகவும் இவர்கள் புலிகளின் செயற்பாட்டாளர்கள் எனவும் திவயின தெரிவித்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் சரஸ்வதி ராஜேந்திரன், ஈழத்திற்கான ஒத்துழைப்பு மத்திய நிலையத்தின் ஏற்பாட்டாளர் செல்வராஜ் முருகையன், அதன் சட்டத்தரணி சஸ்தீமா தேவி சுப்ரமணியம், சுதா காந்தி, கே.சுந்தர் ஆகியோர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

புலிகளின் ஈழத்தை உருவாக்கும் பொறுப்பு இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக புலிகளின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளதாகவும் திவயின கூறியுள்ளது.

No comments:

Post a Comment